Monday 4 March 2013

வால்நட்சத்திரம்

விண்வெளியில் நிகழக்கூடிய சுவாரஸ்யமான நிகழ்வுகளில் ஒன்றான வால்நட்சத்திரம் நெருங்கி வரும் நிகழ்வு அடுத்த வாரம் நிகழவுள்ளது.
விரிவடைந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் நெப்டியூன் கிரகத்திற்கு அடுத்துள்ள குய்பர் விண்கல் பட்டையைச் சேர்ந்த வால் நட்சத்திரங்கள் எப்போதாவது சூரியனுக்கு அருகில் வந்து செல்லும்.
வரும் 7ம் தேதி அந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஹவாய் தீவில் உள்ள PANSTARRS என்ற தொலைநோக்கியினால் கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வால் நட்சத்திரமானது, வரும் 10ம் தேதி சூரியனுக்கு மிக அருகில் வரவுள்ளது.

No comments:

Post a Comment